தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பீதியை கிளப்பும் சிவகுமார் விஜய் கண்டிக்காதது ஏன்? பழனிசாமி கேள்வி

பீதியை கிளப்பும் சிவகுமார் விஜய் கண்டிக்காதது ஏன்? பழனிசாமி கேள்வி

பீதியை கிளப்பும் சிவகுமார் விஜய் கண்டிக்காதது ஏன்? பழனிசாமி கேள்வி


UPDATED : நவ 10, 2026 06:05 PM

ADDED : நவ 10, 2026 06:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 06:05 PM ADDED : நவ 10, 2026 06:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘தமிழக மக்களிடையே பீதியை கிளப்பும் கர்நாடக முதல்வர் சிவகுமாரை கண்டிக்காதது ஏன்’ என, முதல்வர் விஜய்க்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:

‘நதிகள் தேசிய சொத்து; எந்த ஒரு மாநிலமும் தனி உரிமை கோர முடியாது. கீழ்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல், மேல்படுகை மாநிலங்கள் எவ்வித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது’ என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆனாலும், தமிழகத்தின் ஒப்புதல் இன்றி, மேகதாது அணை கட்ட, கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என, அ.தி.மு.க., ஆட்சியில் பிரதமரிடம் கடிதம் வாயிலாகவும், நேரிலும் வலியுறுத்தினேன்.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் சிவகுமார், ‘மேகதாதுவில் அணை கட்ட யாருடைய அனுமதியும் தேவை இல்லை’ என்று கூறியதாக செய்திகள் வருகின்றன. மேகதாது அணை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதித்து விட்டதாக, தவறான தகவலைக் கூறி, தமிழக மக்களிடையே அவர் பீதியை கிளப்பி வருகிறார்.

ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி, அதை உண்மையாக்கி விடலாம் என்று கர்நாடகா முதல்வர் நினைக்கிறார். அவருக்கு பதிலளிக்காமல், வாய்மூடி மவுன சாமியாராக இருக்கும், வாடகை கால் கூட்டணி அரசின் முதல்வர் விஜயின் செயல் கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us