sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதா ?: திருமா குமுறல்

/

தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதா ?: திருமா குமுறல்

தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதா ?: திருமா குமுறல்

தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதா ?: திருமா குமுறல்

82


UPDATED : ஜன 29, 2025 11:17 PM

ADDED : ஜன 29, 2025 11:11 PM

Google News

UPDATED : ஜன 29, 2025 11:17 PM ADDED : ஜன 29, 2025 11:11 PM

82


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : ஈ.வெ.ரா.,வின் கொள்கைகளைக் காப்பதற்காகவே, தி.மு.க., கூட்டணியில் வலியோடும், ஏமாற்றத்தோடும் இருக்கிறோம்,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.

சென்னை புளியந்தோப்பில், நேற்று முன்தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுக் கூட்டம் நடந்தது.

அதில், திருமாவளவன் பேசியதாவது:

ஈ.வெ.ரா., தமிழை காட்டுமிராண்டி மொழி என்று பேசினார் என்றால், அவர் தமிழை இழிவுபடுத்தவில்லை. தமிழில் புராணங்கள் உள்ளன; அவற்றை தான் எதிர்த்தார். காட்டுமிராண்டி காலத்தில் எழுதிய புராணங்கள் உள்ளன.

அதனால், தமிழை திட்டினார். பெற்ற பிள்ளையை தாய் திட்டுவது போல், தமிழை விமர்சித்து பேசினார்; அது தவறா?

எழுத்து சீர்திருத்தம் கொண்டு வந்தவர் ஈ.வெ.ரா., கடினமாக எழுதுவதை செம்மைப்படுத்தினார்; 247 எழுத்துக்கள் தேவையில்லை என்று கூறியவர். அப்போது எழுத்து சீர்திருத்தத்தை நடைமுறை செய்தவர் எம்.ஜி.ஆர்.,

ஈ.வெ.ரா., ஹிந்து மதத்தை மட்டும் விமர்சித்தார் என்றால், அவர் அந்த மதத்தைச் சேர்ந்தவர். அதனால், வேறு மதத்தை விமர்சிக்க முடியாது என்பதும் ஒரு காரணம்.

உச்ச நீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் எத்தனை பேர் நீதிபதிகளாக இருக்கின்றனர்? ஆதிதிராவிடர் எவ்வளவு பேர் உள்ளனர்? எப்போதாவது ஒருவர் இருப்பார்!

'விடுதலை சிறுத்தைகள் கொடி ஏற்றினால், கொடியை பிடுங்கி போடு' என்கிறார் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ். பெரும்பான்மை மதத்தைச் சார்ந்தவர்கள், சிறுபான்மை மக்களை பாதுகாக்க வேண்டும்; அது தான் ஜனநாயகத்தின் சிறப்பு. இதை தான் அம்பேத்கர் சொன்னார். ஆனால், தற்போது சிறுபான்மையினர் நசுக்கப்படுகின்றனர்.

தி.க., எதிர்க்கிறதோ இல்லையோ, நான் எதிர்ப்பேன். தி.மு.க., எதிர்க்கிறதோ இல்லையோ, நான் சனாதனத்தை கடுமையாக எதிர்ப்பேன்.

இரண்டு மாதங்களுக்கு முன், என்னையே பகடைக் காயாக உருட்டப் பார்த்தனர்; ஆனால், சிறுத்தை சிக்கவில்லை. நீங்கள் நினைப்பது போல் திருமாவளவன் இல்லை. தி.மு.க., கூட்டணியில் இருக்கிறோம்; ஆனால், மனநிறைவோடு இருக்கிறோம் என சொல்ல முடியாது.

தி.மு.க.,வோடு பயணிக்கும்போது, விமர்சனங்கள் இல்லாமல் இல்லை; வலிகள் இல்லாமல் இல்லை; ஏமாற்றங்கள் இல்லாமல் இல்லை. ஆனாலும், ஈ.வெ.ரா., கொள்கைகளை காப்பதில் உறுதியாக இருக்கிறோம்.

அம்பேத்கர், மார்க்ஸ் போன்ற அறிஞர்களின் சிந்தனைகளை பாதுகாப்பதில், வலிகளை தாங்கிக் கொண்டு தேர்தல் முடிவுகளை எடுக்கிறோம். அதை புரிந்து கொள்ள, உங்களுக்கு அரசியல் ஞானம் தேவைப்படும். இல்லையென்றால், மேம்போக்கில் எங்களை விமர்சிப்பீர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

தி.மு.க., கூட்டணியில், தான் அதிருப்தியுடன் தொடர்வதாக திருமாவளவன் மீண்டும் கூறியிருப்பது, கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

'கெடுபிடியை கைவிடுங்கள்!'


'வேங்கைவயல் கிராமத்தில் போராடி வரும் மக்கள் மீது, போலீசாரின் கெடுபிடியை கைவிட வேண்டும்' என, திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில், மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், பட்டியலினத்தைச் சேர்ந்த மூவர் தான் குற்றவாளி என, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 'பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக மாற்றுவதை ஏற்க முடியாது' என, அந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து, திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:வேங்கைவயல் கிராமத்தில், மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து, அறவழியில் போராடி வருகின்றனர். அவர்களை அங்கே சென்று சந்திப்பதற்கு, போலீசார் கெடுபிடிகள் செய்வது அதிர்ச்சியளிக்கிறது. போலீசாரின் இந்த கெடுபிடி நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இதுகுறித்து, தமிழக அரசுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us