sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வறண்டு கிடக்கும் 3,260 ஏரிகள் வடகிழக்கு மழைக்கு நிரம்புமா?

/

வறண்டு கிடக்கும் 3,260 ஏரிகள் வடகிழக்கு மழைக்கு நிரம்புமா?

வறண்டு கிடக்கும் 3,260 ஏரிகள் வடகிழக்கு மழைக்கு நிரம்புமா?

வறண்டு கிடக்கும் 3,260 ஏரிகள் வடகிழக்கு மழைக்கு நிரம்புமா?


ADDED : அக் 14, 2024 04:18 AM

Google News

ADDED : அக் 14, 2024 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பல்வேறு மாவட்டங்களில் வறண்டு கிடக்கும், 3,260 ஏரிகளுக்கு, வடகிழக்கு பருவமழையில் நீர்வரத்து கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மாநிலம் முழுதும் நீர்வளத்துறை பராமரிப்பில், 224 டி.எம்.சி., கொள்ளளவு உள்ள 90 அணைகள் உள்ளன.

இவற்றில் தற்போது, 127 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. அதாவது கொள்ளளவில், 56.4 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

பாசனம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கு தொடர்ச்சியாக நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், பல அணைகளின் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.

நீர்வளத்துறை பராமரிப்பில், 14,139 ஏரிகள் உள்ளன. இவற்றில், 502 ஏரிகள் மட்டும் முழு கொள்ளளவு நிரம்பிஉள்ளன.

அதேநேரம், 1,382 ஏரிகளில், 75 முதல் 99 சதவீதம் வரையும்; 1,808 ஏரிகளில், 51 முதல் 75 சதவீதம் வரையும்; 2,152 ஏரிகளில், 26 முதல் 50 சதவீதம் வரையும்; 5,035 ஏரிகளில், 25 சதவீதம் வரையும் நீர் இருப்பு உள்ளது.

தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்தும், 3,260 ஏரிகள் ஒரு சொட்டு நீர் இன்றி வறண்டு கிடக்கின்றன.

இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் - 948; திருநெல்வேலியில் - 456; சிவகங்கையில் - 248; மதுரையில் - 190; விருதுநகரில் - 172; துாத்துக்குடியில் - 152; தென்காசியில் - 122; கள்ளக்குறிச்சியில் - 100 ஏரிகள் உள்ளன.

நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் காரணமாக நீர்வரத்து கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, அதற்கான காரணங்களை விரைந்து ஆராய வேண்டும்.

வடகிழக்கு பருவமழையிலாவது, இந்த ஏரிகளுக்கு நீர்வரத்து கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us