தொழில் துறையில் மகளிர் பங்கேற்பு தமிழகத்தில் 42 சதவீதம்
தொழில் துறையில் மகளிர் பங்கேற்பு தமிழகத்தில் 42 சதவீதம்
ADDED : செப் 24, 2024 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : ''தமிழகத்தில் தொழில் துறையில் பெண்கள் பங்கேற்பு 42 சதவீதமாக உள்ளது. இது, தேசிய சராசரியான 24.28 சதவீதத்தை விட அதிகம்,'' என, அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.
சென்னை லயோலா கல்லுாரியில், நடந்த மாநாட்டில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணே சன், மாநாட்டை துவக்கி வைத்து பேசிய தாவது:
தமிழகத்தில் தொழில் துறையில் பெண்களின் பங்கேற்பு 42 சதவீதமாக உள்ளது. இது, தேசிய சராசரியான 24.28 சதவீதத்தை விட அதிகம். இது, பெண்களுக்கு உகந்த சூழலை உருவாக்கும் அரசின் முயற்சிக்கு சான்றாக உள்ளது.
பெண்களுக்கு இலவச பஸ் பயணம், காலை உணவு திட்டம் போன்றவை, பெண்களை தொழில் பங்கேற்பில் உற்சாகப்படுத்தி உள்ளன. பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்குவது, அவர்களின் நிதி சுதந்திரத்துக்கான ஒரு பெரிய படியாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.

