sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத்தொகையும் உயரும் 'வெல்லும் தமிழ் பெண்கள்' நிகழ்ச்சியில் முதல்வர் உறுதி

/

 பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத்தொகையும் உயரும் 'வெல்லும் தமிழ் பெண்கள்' நிகழ்ச்சியில் முதல்வர் உறுதி

 பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத்தொகையும் உயரும் 'வெல்லும் தமிழ் பெண்கள்' நிகழ்ச்சியில் முதல்வர் உறுதி

 பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத்தொகையும் உயரும் 'வெல்லும் தமிழ் பெண்கள்' நிகழ்ச்சியில் முதல்வர் உறுதி

5


ADDED : டிச 13, 2025 01:01 AM

Google News

ADDED : டிச 13, 2025 01:01 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''தமிழகத்தில் உள்ள 1.30 கோடி பெண்களுக்கு, மாதம் 1,000 ரூபாய் கிடைக்கும். தமிழகத்தில் பெண்கள் உயர்ந்து நடை போட, நிச்சயம் உரிமைத்தொகையும் உயரும்,'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், தமிழக அரசு சார்பில், மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் மற்றும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள், தங்கள் சாதனைகளை விளக்கும் 'வெல்லும் தமிழ் பெண்கள்' நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்க திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து பேசியதாவது:

ஜாதி, மதம், இனம், மொழி, பாலின பாகுபாடு இல்லாமல், எல்லாருக்கும் சமத்துவ சமுதாயம் என்பது தான், அரசின் லட்சியம். 2021ம் ஆண்டு மே மாதம் நான் முதல்வராக பொறுப்பேற்றது முதல், தி.மு.க., அரசு பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்த லட்சிய பயணத்தில் மிகப்பெரிய முன்னெடுப்பாக, மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல் படுத்தப்படுகிறது.

இத்திட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. விடியல் பயணம், புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டம் வாயிலாக பணப்புழக்கம், சேமிப்பு பழக்கம் மக்களிடம் அதிகரித்துள்ளது.

தி.மு.க., அரசின் முத்திரை திட்டங்களை முதலீடாக மாற்றி, தங்கள் பொருளாதார வலிமையை தமிழக பெண்கள் உயர்த்தி உள்ளனர்; இதுதான் இந்த திட்டங்களின் வெற்றி.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் வெற்றியை பார்த்து, பல்வேறு மாநிலங்களிலும் இத்திட்டத்தை செயல் படுத்துகின்றனர்.

மக்கள் நலத் திட்டங்களை கொச்சைப்படுத்தியவர்கள் கூட, தங்கள் மாநிலங்களில் இத்திட்டத்தை செயல்படுத்துகின்றனர். மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர்,

தொடர்ச்சி 7ம் பக்கம்

பெண்கள் உயர்ந்து...

3ம் பக்கத் தொடர்சசி

ஒடிஷா, புதுச்சேரி, கர்நாடகா, ஹிமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், மேற்குவங்கம், சிக்கிம் என 10 மாநிலங்களில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில், 1,000 ரூபாய் என்பது தொடக்கம் மட்டும் தான். பத்து ஆண்டுகளாக பாழ்படுத்தப்பட்ட, தமிழகத்தின் வளர்ச்சியை மீட்டெடுத்து, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளோம். மகளிர் உரிமைத்தொகை விரிவாக்க திட்டத்தில் சேர்க்கப்பட்டவர்களுக்கு, காலையே வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்தி விட்டோம். இனி, தமிழகத்தில் உள்ள, 1.30 கோடி பேருக்கு மாதம் 1,000 ரூபாய் கிடைக்கும்.

தமிழகத்தில் பெண்கள் உயர்ந்து நடை போட, நிச்சயம் உரிமைத்தொகையும் உயரும். பெண்களின் உரிமையும் உயரும். இத்தொகை உயர்வுக்கு மட்டுமல்ல. குழந்தைகளின் கல்விக்கும் பயன்படும். கல்வி தான் சிறந்த முதலீடு. அது யாராலும் அழிக்க முடியாத சொத்து. தலைமுறைகள் தழைக்க, பெண்கள் முன்னேற்றம், பெண்கள் கல்வி அவசியம். ஆணும், பெண்ணும் சரிநிகர் சமம் என, சாதனை படைக்கவேண்டும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

துணை முதல்வர் உதயநிதி பேசுகையில்,''தி.மு.க., அரசு, பெண்களுக்கான அரசு என, நாடு முழுதும் சொல்கின்றனர். முதல்வர் செயல்படுத்தும் திட்டங்களால், பெண்கள் பல துறைகளில் முன்னேறி வருகின்றனர். இன்றைக்கு நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில், தமிழகத்தை சேர்ந்த, 43 சதவீதம் பெண்கள் பணிபுரிகின்றனர். மகளிர் உரிமைத் தொகையில் சில விதிகளை தளர்த்தி, கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது,'' என்றார்.

இந்நிகழ்ச்சியில் சமூக சேவகரும், காந்தியவாதியுமான கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், பாரா ஒலிம்பிக் இந்திய வீராங்கனை துளசிமதி முருகேசன், தலைமைச் செயலர் முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

***

புதிதாக 16.9 லட்சம் பேர் சேர்ப்பு தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை, 2023ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 1.13 கோடி பேருக்கு, மாதம் 1,000 ரூபாய், வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. முன்னதாக இத்திட்டத்தில் விண்ணப்பித்தவர்களில், ஏராளமானோர் தகுதி இல்லை என நிராகரிக்கப்பட்டனர். இதனால், அவர்கள் அதிருப்தி அடைந்தனர். அவர்களை சமாதானப்படுத்த, விதிகளில் தளர்வு செய்து, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம், 28 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 16.9 லட்சம் பேருக்கு, நேற்று முதல் மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதனால், திட்ட பயனாளிகள் எண்ணிக்கை, 1.30 கோடியாக உயர்ந்துள்ளது. ***








      Dinamalar
      Follow us