ADDED : பிப் 26, 2024 12:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: பிரதமர் மோடி தலைமையில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன் உள்பட பலர் பா.ஜ.வில் இணைகின்றனர் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
இது பற்றி பொள்ளாச்சி ஜெயராமனிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‛‛ எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த போது அவருடன் கொடியேந்தியவன். அதன் பின் அம்மா வழியில் பயணித்து வருகிறேன். என்னை எம் எல்.ஏ. ஆக்கி மக்கள் பணி செய்ய மாபெரும் வாய்ப்பு வழங்கினர்.
எம்ஜிஆர்., ஜெயலலிதா வழியில் கட்சியை வழி நடத்தும் இ.பி.எஸ்., தலைமையில் என் கட்சி பணி தொடரும். எந்த நிலையிலும் என் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. எம்.ஜி.ஆர்., காட்டிய பாதையில் மட்டுமே என் பயணம். இவ்வாறு அவர் கூறினார்.

