ADDED : மார் 27, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்:குவாரியில் கற்கள் அரைக்கும் இயந்திர பெல்ட்டில் சிக்கி துாக்கி வீசப்பட்டவர் சம்பவ இடத்தில் பலியானார்.
பா.ம.க., கவுரவ தலைவரும், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமானவர் மணி. இவரது மைத்துனர் ஆறுமுகம், 50; சேலம் மாவட்டம் மூலக்காட்டில் கல்குவாரி நடத்துகிறார். இவரது உறவினரான பென்னாகரம், தின்னபெல்லுாரை சேர்ந்த சக்திவேல், 38, என்பவர் குவாரியில் பணிபுரிந்தார். நேற்று காலை, குவாரியில் கற்கள் அரைக்கும் இயந்திரத்தின் பெல்ட், சக்திவேல் மீது உரசியது.
இதில் துாக்கி வீசப்பட்டவர் சம்பவ இடத்தில் பலியானார். கொளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர். இறந்த சக்திவேலுக்கு மனைவி இந்திரபிரியா, 27, மகள், மகன் உள்ளனர்.