தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மீண்டும் களைகட்ட துவங்கியது ஏற்காடு

 மீண்டும் களைகட்ட துவங்கியது ஏற்காடு

 மீண்டும் களைகட்ட துவங்கியது ஏற்காடு


ADDED : ஏப் 24, 2026 10:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 10:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏற்காடு:சேலம் மாவட்டம், ஏற்காட்டுக்கு விடுமுறை நாட்களில் சுற்றுலாப்பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கும். சட்டசபை தேர்தலை முன்னிட்டு சமீப நாட்களாகவே, அங்கு சுற்றுலா பயணியர் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருந்தது.

நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. இதையடுத்து நேற்று, ஏராளமான சுற்றுலா பயணியர் ஏற்காட்டில் குவிந்தனர். அவர்கள் அண்ணா ஏரி, தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லம், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில் ஆகிய இடங்களை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர்.

அதேபோல் படகு இல்லத்திலும் ஏராளமான சுற்றுலா பயணியர், பயணச்சீட்டு வாங்கி நீண்ட நேரம் காத்திருந்து, படகு சவாரி செய்து ஆனந்தம் அடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us