ADDED : ஏப் 18, 2025 09:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் தங்கி பயிற்சி பெற, மாணவ, மாணவியர், 'ஆன்லைன்' வாயிலாக, மே 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மாநிலத்தில், 28 இடங்களில் உள்ள விளையாட்டு விடுதிகளில், ஏழு, எட்டு, ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவ, மாணவியர் சேரலாம். அதற்கு, www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை, அடுத்த மாதம் 5ம் தேதிக்குள் பூர்தத்தி செய்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான மாவட்ட போட்டிகள், மே 7ம் தேதியும், மாணவியருக்கான போட்டிகள் 8ம் தேதியும் நடக்க உள்ளன.
மேலும் விபரங்களுக்கு, ஆடுகள தகவல் மையத்தை, 95140 00777 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.