உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : நவ 05, 2026 04:02 PM
ADDED : நவ 05, 2026 01:57 AM

அ நிறம் | அளவு
திருநெல்வேலி: ஏர்வாடி அருகே, குழந்தைகளுடன் டூ - வீலரில் சென்ற பெண்ணிடம், 15 சவரன் தாலி செயின் பறித்த வழக்கில், சவளைக்காரன்குளத்தைச் சேர்ந்த அருண்குமார், 24, என்பவர், 48 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே, புலியூர்குறிச்சி மெயின் சாலையில் நவ., 2ல் நடந்த சம்பவம் குறித்து, ஏர்வாடி போலீசார் வழக்கு பதிந்தனர். நாங்குநேரி டி.எஸ்.பி., சதீஷ் கண்ணன், இன்ஸ்பெக்டர் முத்துகுமரன் தலைமையிலான தனிப்படையினர், 'சி.சி.டி.வி' பதிவுகளை ஆய்வு செய்து, குற்றவாளி அருண்குமாரை கைது செய்தனர்.
