ADDED : செப் 09, 2011 09:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பீஜிங்: சீனாவில், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக, மானிய விலையில் 86 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
வீடு மற்றும் நிலங்களின் விலை அதிகரித்துக் கொண்டே வருவதால், சொந்த வீடு என்பது கனவாகி விட்டதாக, சீனாவில் மக்களிடையே புகார் கிளம்பியுள்ளது. இதையடுத்து, சீன அரசு ஒரு கோடி வீடுகளைக் கட்ட உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ஏற்று, குறைந்த வாடகை வீடுகள், மானிய விலை வீடுகளை, மாநில அரசுகள் கட்டி வருகின்றன. தற்போது மானிய விலையில், 86 லட்சத்து 80 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அடுத்த ஐந்தாண்டுகளில் மேலும் மூன்றரை கோடி மானிய விலை வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.