ADDED : ஜூன் 04, 2024 06:27 AM

லாஸ் ஏஞ்சல்ஸ் : மீடியா ஜாம்பவனாக கருதப்படும் ராபர்ட் முர்டோ, தன் 93வது வயதில் 67 வயது பெண்ணை நேற்று ஐந்தாவது திருமணம் செய்தார்.
அமெரிக்காவில், பாரம்பரியமிக்க 'நியூஸ் ஆப் த வேர்ல்டு' என்ற பத்திரிகை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. அப்போது, இந்நிறுவனத்தின் தலைவராக இருந்த ராபர்ட் முர்டோ பதவி விலகினார்.
இவர், 'பாக்ஸ் நியூஸ் கார்ப்பரேஷன்' உட்பட பல்வேறு ஊடக நிறுவனங்களை நிறுவினார். அவரது மொத்த சொத்து மதிப்பு 1.66 லட்சம் கோடி ரூபாய். 1956ம் ஆண்டு முதல்திருமணம் செய்த இவர், விவாகரத்து பெற்றார்.
பின்னர் 1967, 1999, 2016ல் என மூன்று திருமணங்கள் முடித்துள்ளார். அவை, விவாகரத்தில் முடிந்தன. இந்நிலையில், தன் 67 வயது காதலியான எலெனா ஜோகோவாவை ஐந்தாவதாக திருமணம் செய்துள்ளார்.
எலெனா, ரஷ்யாவைச் சேர்ந்தவர். தற்போது, அமெரிக்காவில் வசிக்கிறார். முர்டோவுக்கு, முந்தைய திருமணங்கள் வாயிலாக ஆறு குழந்தைகள் உள்ளனர்.