அபுதாபியில் அக்டோபரில் நடக்கிறது பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு
அபுதாபியில் அக்டோபரில் நடக்கிறது பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு
ADDED : ஆக 07, 2011 06:56 AM
அபுதாபி: வளைகுடா நாடான யு.ஏ.ஐ.
நாட்டின் அபுதாபியில் சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு வரும் அக்டோபர் மாதம் நடக்கிறது. அரேபிய பயங்கரவாத எதிர்ப்பு -2011 எனும் பெயரில் அபுதாபியின் , பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு வரும் அக்டோபர் மாதம் 31-ம் தேதியிலிருந்து நவம்பர் 2-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைக்கிறது. இதில் பயங்கரவாதத்தின் தற்போதைய நிலமை குறித்தும் பயங்கரவாதத்தினை ஒழித்துகட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளன. இம்மாநாட்டில் சர்வதேச பாதுகாப்பு தொடர்பான நிபுணர்கள், பல்வேறு பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர் எனவும், இதில் சர்வதேச பயங்கரவாதகளின் சதி திட்டங்களை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும், தாக்குதல்களை முயறிடிப்பது குறித்த யுக்தி குறித்தும், உள்நாட்டு , சர்வதேச குற்றவாளிகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக, மத்திய கிழக்கு நாடுகளுக்கான பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் இயக்குனர் கிறிஸ்டோபர் ஹட்சன் கூறினார்.