வீட்டை விட்டு வெளியேற்றிய ஓனர் ; கனடாவில் இந்தியருக்கு நேர்ந்த துயரம்
வீட்டை விட்டு வெளியேற்றிய ஓனர் ; கனடாவில் இந்தியருக்கு நேர்ந்த துயரம்
ADDED : அக் 05, 2024 01:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டாவா: கனடாவில் வாடகைக்கு குடியிருந்தவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய வீடியோ சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பிராம்டன் என்ற பகுதியில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் வாடகைக்கு இருந்துள்ளார். இவர் பல முறை சொல்லியும் காலி செய்யாததால் ஆவேசப்பட்ட வீட்டின் உரிமையாளர் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றி , அவரது உடமைகளையும் வெளியே எறிகிறார். அவர் அரைகுறை ஆடையுடன் திணறியபடி பெரும் சோகத்துடன் நிற்கிறார்.
இந்த வீடியோ சமூக எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளன. 17 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். ஆயிரக்கணக்கான கமன்ட்ஸ்கள் வந்துள்ளன. வீட்டு உரிமையாளர் செயல்பாட்டை கண்டித்து கருத்து பகிரப்பட்டுள்ளன.