ADDED : மே 16, 2024 03:30 PM

பீஜிங்: சீனா சென்ற ரஷ்ய அதிபர் புடினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இருநாட்டு உறவு குறித்து, சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் புடின் ஆலோசனை நடத்தினார்.
உக்ரைன் - ரஷ்யா போர் கடந்த 2022ம் ஆண்டு துவங்கியது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் செயல்படுகின்றன. இந்த நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. இதற்கு பதிலடியாக ரஷ்யாவும் அந்த நாடுகள் மீது பொருளாதார தடை விதித்தது.
வரவேற்பு
இந்நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடினுக்கு அழைப்பு விடுத்தார். அதன் பேரில் அதிபர் புடின் இன்று (மே 16) சீனாவுக்கு சென்றார். ரஷ்ய அதிபர் புடினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆலோசனை
இருநாட்டு உறவு குறித்து, சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் புடின் ஆலோசனை நடத்தினார். 5வது முறையாக பதவி ஏற்ற பிறகு அதிபர் புடின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். ''எங்களுக்கு உதவும் சீனாவின் உண்மையான விருப்பத்தை பாராட்டுகிறேன்' என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.