ADDED : மார் 08, 2025 10:32 PM

துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராத் கோஹ்லி, 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு முன்னதாக முட்டியில் காயம் அடைந்ததாகவும், பயிற்சியை நிறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிபோட்டி, நாளை (மார்ச்-9)துபாயில் இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையே நடைபெறுகிறது.
இந்நிலையில் கோஹ்லிக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, அவரது பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த காயம் எவ்வளவு கடுமையானது மற்றும் அது இறுதிப் போட்டியில் அவரது பங்கேற்பை பாதிக்குமா என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை.
விராட் கோக்லி, இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக இருப்பதால், அவரது காயம் அணியின் செயல்திறனை பெரிதும் பாதிக்கக்கூடும்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் மற்றும் மருத்துவ அணி, கோஹ்லியின் பிட்னஸை கண்காணித்து, அவர் விரைவாக மீண்டும் பயிற்சியில் சேருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் ரசிகர்கள், கோஹ்லி விரைவாக குணமடைந்து, இறுதிப் போட்டியில் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.