22 மாதங்கள் காசா போரில் 62,000 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு! சுகாதார அமைச்சகம் அறிவிப்பு
22 மாதங்கள் காசா போரில் 62,000 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு! சுகாதார அமைச்சகம் அறிவிப்பு
ADDED : ஆக 18, 2025 07:47 PM

கெய்ரோ: 22 மாதகால காசா போரில், 62000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் கூறி இருப்பதாவது: 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி போர் தொடங்கியது. 22 மாத போர்க்காலத்தில் 62000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர். 1,56,230 பேர் காயம் அடைந்துள்ளனர். உதவி கோரிய அல்லது நிவாரண முகாம்களில் இருந்தவர்களில் 1965 பேர் உயிரிழந்து உள்ளனர். திங்கட்கிழமை மட்டும் உதவிகளை பெற முயன்ற 7 பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் கூறி உள்ளது.
இதனிடையே, எகிப்து நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள், காசாவுக்கு வெளியே பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக மீள் குடியேற்றம் செய்யும் இஸ்ரேல் திட்டத்தை கண்டித்துள்ளனர்.