தீபாவளி கொண்டாடி மகிழுங்க: விண்வெளியில் இருந்து பறந்து வந்த வாழ்த்து: சொல்லுறது யார்னு பாருங்க!
தீபாவளி கொண்டாடி மகிழுங்க: விண்வெளியில் இருந்து பறந்து வந்த வாழ்த்து: சொல்லுறது யார்னு பாருங்க!
ADDED : அக் 29, 2024 08:51 AM

வாஷிங்டன்: 'பூமியிலிருந்து 260 மைல்களுக்கு அப்பால் தீபாவளியைக் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்' என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியர்கள் கொண்டாடும் பாரம்பரிய தீபத்திருநாளான தீபாவளி பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்க வாழ் இந்தியர்களுடன் இணைந்து வெள்ளை மாளிகையில் தீபம் ஏற்றி தீபாவளியை கொண்டாடினார். இதுவரை இல்லாத அளவிற்கு நியூயார்க் முழுவதும் தீபாவளிக்கு பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வுக்கு சென்ற, சுனிதா வில்லியம்ஸ், உலகெங்கிலும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: என் அப்பா இந்தியப் பண்டிகைகள், கலாசாரத்தைக் கற்றுக்கொடுத்தார்; பூமியிலிருந்து 260 மைல்களுக்கு அப்பால் தீபாவளியைக் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார்.