மெக்சிகோ பாரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலி
மெக்சிகோ பாரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலி
ADDED : நவ 25, 2024 07:19 AM

டபஸ்கோ: மெக்சிகோவில் பாரில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மெக்சிகோவின் தென்கிழக்கு மாகாணமான டபஸ்கோவில் உள்ள வில்லாஹெர்மோசா நகரில் உள்ள பாரில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார். அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குவரெட்டரோ பகுதியில் இதே மாதிரியான துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இதில், 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
எண்ணெய் தயாரிப்பை பிரதான தொழிலாக கொண்டுள்ள டபஸ்கோவில் கடந்த சில மாதங்களாக வன்முறை அதிகரித்து வருகிறது. ஜனவரி முதல் அக்டோபர் வரையில் 715 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது கடந்தாண்டில் 253ஆக இருந்தது கவனிக்கத்தக்கது.