நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 60 பேர் பலி; 30 பேர் மாயம்
நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 60 பேர் பலி; 30 பேர் மாயம்
ADDED : செப் 05, 2025 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நைஜர்:நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில், 60 பேர் உயிரிழந்தனர்; 10 பேர் மீட்கப்பட்ட நிலையில், 30 பேர் மாயமாகியுள்ளனர். ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில், 100க்கும் மேற்பட்ட பயணியருடன் படகு ஒன்று சென்றது. ஆற்றின் அடிப்பகுதியில் இருந்த மரத்துண்டின் மீது படகு மோதியது.
அந்த சிறிய படகில், 100க்கும் மேற்பட்டோர் சென்ற நிலையில், அதிக சுமை காரணமாக மோதிய வேகத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், 60 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தை கள் ஆவர்.
இந்த விபத்தில் சிக்கிய 10 பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், 30 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இரங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றபோது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.