தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ சீனாவில் அஜித் தோவல் எல்லை பிரச்னை குறித்து இன்று பேச்சு நடத்துகிறார்

சீனாவில் அஜித் தோவல் எல்லை பிரச்னை குறித்து இன்று பேச்சு நடத்துகிறார்

சீனாவில் அஜித் தோவல் எல்லை பிரச்னை குறித்து இன்று பேச்சு நடத்துகிறார்


ADDED : ஆக 24, 2026 09:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2026 09:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பீஜிங், ஆக. 25–

சீனா சென்றுள்ள நம் தேசிய பாதுகாப்பு ஆலேசகர் அஜித் தோவல், பீஜிங்கில் இன்று நடக்கும் சிறப்பு பிரதிநிதிகள் கூட்டத்தில், எல்லை பிரச்னை தொடர்பாக பேச்சு நடத்த உள்ளார்.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளதாக்கில் கடந்த 2020ல் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியா – சீனா உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் காரணமாக எல்லை பகுதியில் இரு நாட்டு படைகளும் நேருக்கு நேர் நிறுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து இரு நாட்டு உறவுகளை சீர்படுத்தும் நடவடிக்கைகளை இரு தரப்பும் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், இந்தியா – சீனா எல்லை பிரச்னை தொடர்பாக நடக்கும் சிறப்பு பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்க நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன தலைநகர் பீஜிங் சென்றடைந்தார். சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை இன்று சந்திக்கும் அவர், இருதரப்பு எல்லை பிரச்னைகள், இருநாட்டு உறவுகள், பிராந்திய பிரச்னைகள் குறித்து முக்கிய பேச்சு நடத்துகிறார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளின் கூட்டமைப்பான ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு வரும் செப்., 12 மற்றும் 13ல் நம் நாட்டில் நடக்கிறது. இதில், சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அஜித் தோவலின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us