ரஷ்யாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6 புள்ளிகளாக பதிவு
ரஷ்யாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6 புள்ளிகளாக பதிவு
ADDED : ஆக 05, 2025 09:45 AM

மாஸ்கோ; ரஷ்யாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. தொடரும் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் எதிரொலியாக, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் 600 ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருந்த கிராஷெனின்னிகோவ் எரிமலை வெடித்து சிதறியது. நிலநடுக்கத்தின் பின் அதிர்வே எரிமலை வெடிக்க காரணம் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர்.
இந் நிலையில், 6 நாட்கள் கழித்து கம்சட்கா பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏதேனும் பாதிப்புகள், உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளதா என்பது பற்றிய எந்த தகவல்களும் வெளியாகவில்லை. சுனாமி அறிவிப்பு வெளியிடப்பட்டதா என்ற விவரங்களும் வெளியாகவில்லை.