ADDED : டிச 24, 2024 08:02 PM

காபூல்: ஆப்கானிஸ்தானில் செயல்படாத இந்திய துணை துாதரகத்தில் பணிபுரியும் உள்ளூர் ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில் இந்திய துணை துாதரகம் 2020-ல் இருந்து பாதுகாப்பு காரணங்களுக்கு மத்தியில் அதன் முழு அளவிலான செயல்பாட்டில் இல்லாமல் இருந்து வருகிறது.
அவ்வாறு இருந்த போதும், ஆப்கானிஸ்தான் பிரஜைகளின் குழு, தூதரகத்தின் வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளை தொடர்ந்து மேற்பார்வை செய்து வருகிறது.
முன்னாள் அதிபர் அஷ்ரப் கனியின் ஆட்சியின் போது, ஆப்கன் முழுவதும் வளர்ச்சித் திட்டங்களில் மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்த இந்தியா, 2021 இல் அதன் அனைத்து துணைத் தூதரகங்களையும் மூடிவிட்டது.
இந்நிலையில் ஜலாலாபாத்தில் செயல்படாத இந்திய துணைத் தூதரகத்தில் பணிபுரியும் ஆப்கானிஸ்தான் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டார். தூதரக ஊழியர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தையும் தாக்கி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு குழுவும் பொறுப்பேற்கவில்லை.