ஆஸ்திரேலியா சிறார்களுக்கான சமூக ஊடக தடை: டிச., 10 முதல் அமலுக்கு வருகிறது
ஆஸ்திரேலியா சிறார்களுக்கான சமூக ஊடக தடை: டிச., 10 முதல் அமலுக்கு வருகிறது
ADDED : நவ 11, 2025 06:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிட்னி:: ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோர்: ஆஸ்திரேலியாவில் 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டி க்டாக், எக்ஸ், யு டியூப், ஸ்னாப்சாட்' போன்ற சமூக ஊடகங்களின் பயன்பாட்டால் குழந்தைகளின் மனம், உடல் நலம் பாதிக்கப்படுவதாக பிரதமர் அந் தோணி அல்பனீஸ் குறிப்பிட்டிருந்தார்.
ஆன்லைனில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, அவற்றை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதற்கு எதிர்க்கட்சியினரும் ஆதரவு தெரிவித்த நிலையில், ஆன்லைன் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2024 என்ற பெயரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டம், 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள், சமூக ஊடகங்களில் கணக்குகளை துவங்கவோ, பயன்படுத்தவோ தடை செய்கிறது. இது வரும் டிச., 10ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

