UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 08:56 PM

1. செப்டம்பர் 30 காலை துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் சர்வதேச விமான நிலையத்துக்கு புறப்பட்ட `பிளைதுபாய்' நிறுவனத்தின் விமானத்தில், விமானிகள் இடையே தகராறு ஏற்பட்டது.
துபாய் -– டெல் அவிவ்
2. விமானம் நடுவானில் பறந்த போது, விமானத்தின் இயக்கத்தில் துணை விமானி தலையிட முயன்றார். அவரைத் தடுக்க முயன்ற கேப்டன் ஸ்மித் மச்சார் மீது அந்த நபர் கத்தியால் குத்தினார்.
3. காக்பிட்டில் ஏற்பட்ட மோதலின்போது, விமானப் பணியாளர் ஒருவரும் ஒரு பயணியும் வந்து, துணை விமானியை பிடித்து கட்டுப்படுத்தினர்.
4. விமானத்தில் நடந்த மோதலின்போது 34,000 அடி உயரத்தில் பறந்த விமானம் வெறும் 2 நிமிடங்களில் 17,400 அடிக்கு கீழிறங்கியது.
5. பயணியராக இருந்த இரண்டு விமானிகள் விமானத்தை சவுதி அரேபியாவில் உள்ள ஒரு விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கினர்.
துணை விமானி சவுதி அரேபியா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
