பிரதமர் மோடிக்கு பூடான் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
பிரதமர் மோடிக்கு பூடான் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
UPDATED : மார் 22, 2024 04:38 PM
ADDED : மார் 22, 2024 04:37 PM

திம்பு: பிரதமர் மோடிக்கு பூடானின் உயரிய விருதான 'ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக பூடான் சென்றுள்ளார். பாரோ சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் மோடி தரையிறங்கியதும் அந்நாட்டு பிரதமர் ஷெரிங் டோப்காய், இந்திய பிரதமர் மோடியை ஆரத் தழுவி வரவேற்றார். பின்னர் அந்நாட்டு ராணுவ மரியாதையை மோடி ஏற்றுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் மோடிக்கு பூடானின் மிக உயரிய விருதான 'ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதனை பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக், வழங்கினார். இந்த விருதை பெறும் அயல்நாட்டை சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றார்.
இது என்னுடைய தனிப்பட்ட சாதனை அல்ல; இந்தியா மற்றும் 140 கோடி இந்தியர்களுக்கான கவுரவம். இந்த பெருமையை பூடானில் உள்ள இந்தியர்களின் சார்பாக பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். இந்த விருதுக்காக அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.

