ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / உலகம் / இணைப்பு சாலை தகர்ப்பு / இணைப்பு சாலை தகர்ப்பு
/
செய்திகள்
இணைப்பு சாலை தகர்ப்பு
ADDED : அக் 05, 2024 01:35 AM
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் புறநகர் பகுதிகளில் இஸ்ரேல் நேற்று மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியது. லெபனான் - சிரியாவை இணைக்கும் மஸ்னா எல்லை பகுதியிலும் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது.ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள் இந்த எல்லை வழியாகவே ஆயுதங்களை எடுத்துச் செல்வதாக தகவல் வந்ததை அடுத்து, இந்தப் பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், எல்லையில் அமைந்துள்ள சாலைகள் கடுமையாக சேதமடைந்தன. இதனால், லெபனானில் இருந்து சிரியாவுக்கு தப்ப முயன்ற பொதுமக்கள் செல்ல வழியில்லாமல் தவித்தனர்.
கடந்த நான்கு நாட்களாக லெபனான் மீது நடத்தப்பட்டு வரும் அதிரடி தாக்குதலில், 250 ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.பெய்ரூட்டில் சமீபத்தில் நடத்திய வான்வழித் தாக்குதலில் அந்த அமைப்பின் தகவல் தொடர்பு பிரிவு தலைவர் முஹமது ரஷீத் ஸ்காபி கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படைப் பிரிவுகளின் தலைவர்கள் உட்பட ஹெஸ்பொல்லா அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் இந்த தாக்குதல்களில் பலியானதாக இஸ்ரேல் கூறியுள்ளது.