ADDED : நவ 14, 2024 01:42 PM

ரோஸூ: பிரதமர் மோடிக்கு டொமினிகா நாட்டின் மிக உயரிய விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சமயத்தில் கரிபீயன் நட்பு நாடான டொமினிகாவுக்கு கொரோனா மருந்துகளை வழங்கி உதவி செய்தார். அதேபோல, கல்வி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றிலும் இந்தியா சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளது. இதனை கவுரவிக்கும் விதமாக, பிரதமர் மோடி டொமினிகாவின் மிக உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் கயானாவின் ஜர்ஜ் டவுனில் நடக்கும் இந்தியா - கரிகாம் (INDIA-CARICOM) மாநாட்டினல் பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட இருக்கிறது.
இது தொடர்பாக டொமினிகாவின் பிரதமர் ஸ்கெரிட் கூறுகையில், ' பிரதமர் மோடி டொமினிகாவின் உண்மையான நண்பர். குறிப்பாக, உலகத்திற்கே சுகாதார அச்சுறுத்தல் நிலவிய காலத்தில் அவரது உதவி மகத்தானது. அதனை கவுரவிக்கும் விதமாக, நாட்டின் உயரிய விருதை வழங்குகிறோம். இதன்மூலம், இரு நாடுகளின் உறவு பலப்படும்,' எனக் கூறினார்.