எஃகு, அலுமினியத்திற்கு கூடுதல் வரி: டிரம்ப் அறிவிப்பு
எஃகு, அலுமினியத்திற்கு கூடுதல் வரி: டிரம்ப் அறிவிப்பு
UPDATED : பிப் 10, 2025 10:16 AM
ADDED : பிப் 10, 2025 09:55 AM

வாஷிங்டன்: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியத்திற்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்போவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். எந்த நாட்டிற்கு என்பது பற்றி அவர் கூறவில்லை.
அதிபராக பதவியேற்றது முதல், பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக வரி விதித்து டிரம்ப் அறிவித்து வருகிறார். மற்ற நாடுகள் எங்களுக்கு விதிக்கும் வரியை போல் நாங்களும் வரி விதிப்போம் என்கிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனாவும், மெக்சிகோவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து உள்ளன.
இந்நிலையில் அடுத்ததாக, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியத்திற்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்போவதாக டிரம்ப் கூறியுள்ளார். மேலும் அவர், இது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாகவும், அமெரிக்க பொருட்களுக்கு கூடுதலாக வரி விதித்தால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கூடுதல் வரி விதிப்போம் எனவும் கூறியுள்ளார்.

