ADDED : ஜூலை 21, 2011 05:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெய்ரோ: எகிப்தில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த ஹோஸ்னி முபாரக்கை பதவி விலகக் கோரி, ஜனவரி முதல் கிளர்ச்சி நடந்தது.
இதை தொடர்ந்து அவர் பதவி விலகினார். வரும் அக்டோபரில் மூன்று கட்டமாக தேர்தலை நடத்த ராணுவ கவுன்சில் திட்டமிட்டுள்ளது. இது குறித்து, ராணுவ தளபதி மம்து ஷாகீன் குறிப்பிடுகையில், ''பார்லி., யின் இரு சபைகளுக்கான தேர்தலை நடத்த, செப்டம்பரில் பணிகள் ஆரம்பமாகும். செப்., 18ல் தேர்தல் குறித்த தேதி அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் வெளிநாட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்,'' என்றார்.