கனடாவில் ஹர்தீப்சிங் நிஜார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
கனடாவில் ஹர்தீப்சிங் நிஜார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
ADDED : மே 03, 2024 10:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டோவா:
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப்சிங் நிஜார் கொலை வழக்கில்
தொடர்புடைய நபரை கனடா போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலிஸ்தான்
பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், வட அமெரிக்க நாடான கனடாவில் உள்ள
பிரிட்டீஸ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால்
சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்திய ஏஜன்ட்டுகளுக்கு தொடர்பு
உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இதனால் இந்திய
-கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது.
இவ்விவகாரம் சமூக ஊடகங்களில் புயலைக்
கிளப்பியுள்ளது. இந்நிலையில் ஹர்தீப்சிங் நிஜார் கொலையின் தொடர்புடைய
முக்கிய நபரை கனடா போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. .