ADDED : செப் 25, 2024 02:10 AM

கொழும்பு, இலங்கை பிரதமராக, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஹரிணி அமரசூரிய, 54, நேற்று பதவியேற்றார்.
நம் அண்டை நாடான இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே, வெற்றி பெற்றார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் மூத்த தலைவர் தினேஷ் குணவர்தன, பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஹரிணி அமரசூரிய, 54, நேற்று பதவியேற்றார்.
அவருக்கு அதிபர் அனுரா குமார திசநாயகே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு நீதி, கல்வி, தொழிலாளர், தொழில், அறிவியல் - தொழில்நுட்பம், சுகாதாரம், முதலீடு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
உரிமைகள் ஆர்வலரும், பல்கலை விரிவுரையாளருமான ஹரிணி அமரசூரிய, இலங்கையின் மூன்றா-வது பெண் பிரதமராவார்.