ஜோபைடன் அரசு நிர்வாகத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து: எலான் மஸ்க் குற்றச்சாட்டு
ஜோபைடன் அரசு நிர்வாகத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து: எலான் மஸ்க் குற்றச்சாட்டு
ADDED : மார் 05, 2024 08:00 PM

வாஷிங்டன்: எல்லை தாண்டி புலம் பெயர்ந்து வந்த 3 லட்சத்து 20 ஆயிரம் பேரை ரகசியமாக அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதித்து நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக அதிபர் ஜோபைடன் மீது உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ‛எக்ஸ்' வலைதளத்தின் பதிவறே்றம் செய்துள்ளதை ‛டெய்லிமெயில்'' என்ற பத்திரிகை ‛‛ஸ்கிரீன் சாட்'' செய்து வெளியிட்டுள்ள செய்தியில், கூறப்பட்டுள்ளதாவது,
அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 3 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்தோரை ரகசியமாக அமெரிக்காவில் குடியேற அதிபர் ஜோபைடன் அரசு நிர்வாகம் அனுமதித்துள்ளது.
சட்டவிரோதமாக குடியேறியவர்களால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து மட்டுமின்றி, எதிர்காலத்தில் 2001 ம் ஆண்டு செப்.11 இரட்டை கோபுரம் தாக்குதல் சம்பவத்தைவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

