அமெரிக்காவில் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்
அமெரிக்காவில் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்
ADDED : ஆக 14, 2025 03:48 AM
வாஷிங்டன்:அமெரிக்காவில் உள்ள சுவாமி நாராயண் கோவில் வளாக சுவரில் இந்தியா மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்களை காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் கிறுக்கி வைத்துள்ளனர்.
அமெரிக்காவின் இண்டியானா மாகாணம், க்ரீன்வுட் பகுதியில் சுவாமி நாராயண் கோவில் உள்ளது. இங்கு சமீபத்தில் நுழைந்த மர்ம நபர்கள், கோவிலின் பெயர் பலகையில் இந்தியா மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்களை கருப்பு மையால் கிறுக்கிவிட்டு சென்றுள்ளனர்.
இது குறித்து ஹிந்து அமெரிக்கன் அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில், 'அமெரிக்காவில் கடந்த ஓராண்டில் மட்டும் ஹிந்து கோவிலின் புனிதத்தை கெடுக்கும் வகையில் நான்காவது தாக்குதல் நடந்துள்ளது.
'இந்த வகையிலான தாக்குதலை தொடர்வது காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகள் தான்.
'அமெரிக்க எம்.பி.,க்கள் இந்த தாக்குதலுக்கு வெறுமனே கண்டனம் மட்டும் தெரிவிக்காமல், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும்' என கூறியுள்ளது.
சிகாகோவில் உள்ள அமெரிக்காவுக்கான இந்திய துாதரகமும் இந்த தாக்குதலை கண்டி த்துள்ளது.
இதில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கக் கோரி போலீசில் புகார் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.