ADDED : அக் 11, 2025 12:01 AM
கோலாலம்பூர்:மலேஷியாவில் ஹிந்துக்கள் மற்றும் பவுத்தர்களின் மத உணர்வுகளுக்கு மதிப் பளிக்கும் வகையில், அரசு நிகழ்ச்சிகளில் மாட்டிறைச்சி பரிமாறுவதற்கு தடை விதிப்பது குறித்து அந்நாட்டு அரசு ஆலோசித்து வருவதாக செய்தி வெளியாகி உள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் நடந்த சுற்றுலாத் துறை தொடர்பான நிகழ்ச்சியின் விருந்தில், மது பானம் மற்றும் பன்றி இறைச்சி பரிமாறப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து அரசு நிகழ்ச்சிகளில் பன்றி இறைச்சி மற்றும் மதுபானம் பரிமாறுவதற்கு தடை விதித்தார் பிரதமர் அன்வர் இப்ராஹிம்.
முஸ்லிம்களை மதித்து இவற்றுக்கு தடை விதித்ததுபோல், ஹிந்துக்கள் மற்றும் பவுத்தர்களின் மத உணர்வுகளை மதித்து, மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு ஆலோசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.