பெரு நாட்டு அதிபரை நீக்க பார்லி.,யில் எம்.பி.,க்கள் ஓட்டு
பெரு நாட்டு அதிபரை நீக்க பார்லி.,யில் எம்.பி.,க்கள் ஓட்டு
ADDED : அக் 11, 2025 12:01 AM

லிமா:பெரு அதிபர் டினா பொலுவார்டேவை பதவிநீக்கம் செய்ய அந்நாட்டு பார்லிமென்ட்டில் அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது.
முன்னாள் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ, ஊழல் குற்றச்சாட்டு காரணமாக கடந்த 2022ல் அதிரடியாக பதவிநீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து துணை அதிபராக இருந்த டினா பொலுவார்டே அதிபரானார்.
இந்நிலையில், டினா அரசு மீதும், ஊழல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதைத்தொடர்ந்து தலைநகர் லிமாவில் உள்ள பார்லிமென்டில் அவர் விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு, பொலுவார்டே விளக்கமளிக்க அழைக்கப்பட்டார். ஆனால், அவர் வராததால், அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் பதவிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அவரை பதவிநீக்க, பார்லிமென்ட்டில் 124 உறுப்பினர்கள் ஆதரவாக ஓட்டளித்தனர்.
டினா பொலுவார்டே பதவி இழந்த நிலையில், அவருக்கு பதிலாக பார்லிமென்ட் தலைவர் ஜோஸ் ஜெரி புதிய அதிபராக பதவியேற்றார். ஜெரி மீது பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெருவில், 2018 முதல் இ து ஆறாவது அதிபர் மாற்றமாகும். அங்கு அடுத்த அதிபர் தேர்தல், ஆறு மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், பெரு தொடர்ந்து அரசியல் நெருக்கடியை எதிர்கொள்கிறது.