ADDED : ஜூலை 24, 2011 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திம்பு : மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்துடன் பேசியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது என, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறினார்.
பூடான் தலைநகர் திம்புவில் நடந்து வரும், சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில், பங்கேற்ற மாலிக், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்து பேசினார். இது குறித்து பின், அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது; இரு நாடுகளின் பரஸ்பர உறவு முறைகள் குறித்து இருவரும் விவாதித்தோம்' என்றார்.