ADDED : நவ 06, 2024 10:48 PM

புதுடில்லி: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'என் நண்பர் டிரம்பின் அமோக வெற்றிக்கு வாழ்த்துகளை தெரிவித்தேன். தொழில்நுட்பம், ராணுவம், எரிசக்தி, விண்வெளி மற்றும் பல துறைகளில் இந்தியா- - அமெரிக்கா உறவுகளை மேலும் வலுப்படுத்த மீண்டும் இணைந்து பணியாற்றுவோம் என தெரிவித்தேன்' என கூறியுள்ளார். பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து டிரம்ப் கூறுகையில், 'நான் வெற்றி பெற்ற பின், என்னை அழைத்து வாழ்த்து தெரிவித்த முதல் உலக தலைவர் மோடி. ஒட்டுமொத்த உலகமும் மோடியை நேசிக்கிறது. இந்தியா ஒரு அற்புதமான நாடு. பிரதமர் மோடி அற்புதமான மனிதர். மோடியும், இந்தியாவும் என் உண்மையான நண்பர்கள்' என்றார்.