ADDED : ஜன 29, 2024 05:10 AM
மாலே: மாலத்தீவு பார்லிமென்டில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம்பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
நம் அண்டை நாடான மாலத்தீவில், அதிபர் முகமது முய்சு தலைமையில், மக்கள் தேசிய காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
சீன ஆதரவாளரான இவர், நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளார். மாலத்தீவில் இருந்து நம்நாட்டின் படைகளை திரும்பப் பெறும்படி அவர் வலியுறுத்தி வருகிறார்.
எனினும், மாலத்தீவின் முக்கிய எதிர்க்கட்சியான, மாலத்தீவு ஜனநாயக கட்சி நம் நாட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டைஎடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிபர் முகமது முய்சு தலைமையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கு ஒப்புதல் அளிக்க, பார்லி., சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது.
அப்போது, ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் மற்றும் அதன் ஆதரவு பெற்ற மாலத்தீவு முற்போக்கு கட்சி எம்.பி.,க்களுக்கும், எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சிஎம்.பி.,க்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதை அடுத்து, ஆளுங்கட்சி - எதிர்க்கட்சிஎம்.பி.,க்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இதனால் பார்லி.,யில்பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது.