எதிர்க்கட்சி போராட்டத்தை கட்டுப்படுத்த சமூக வலைதளங்கள் முடக்கம்
எதிர்க்கட்சி போராட்டத்தை கட்டுப்படுத்த சமூக வலைதளங்கள் முடக்கம்
ADDED : செப் 09, 2025 07:00 AM

இஸ்தான்புல்: துருக்கியின் பிரதான எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சி, பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, அங்கு முன்னணி சமூக வலைதளங்களுக்கு அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது-.
ஐரோப்பிய நாடான துருக்கியில், முக்கிய எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சியின் தலைவரை இடைநீக்கம் செய்து, தற்காலிக தலைவரை நியமிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து, அக்கட்சி நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பேரணி நடத்த அழைப்பு விடுத்தது.
இந்த பேரணியைக் கட்டுப்படுத்த , துருக்கி அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, சமூக வலைதளங்களை முடக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்நாட்டின் இணையதள சட்டம் மற்றும் பிற சட்டங்கள், இணையதளங்களை தடுக்க அல்லது கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கின்றன.
உலக ளவில் இணைய தணிக்கையை கண்காணிக்கும் அமைப்பான ' நெட்பிளக்ஸ்' தகவலின்படி, ' எக்ஸ், யு டியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டிக்டாக், வாட்ஸாப்' உள்ளிட்ட முன்னணி சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.