ADDED : அக் 08, 2011 06:03 PM
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கை இரண்டு வார காலம் ஒத்தி வைத்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானில் பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் ஜாகியுர் ரெக்மான் லக்வி முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் லக்வி, இந்த கோர்ட் மீது தனக்கு நம்பிக்கை இல்லை எனவும், இதனால் வழக்கை ராவல்பிண்பியிலிருந்து லாகூருக்கு மாற்ற வேண்டும் எனவும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, லக்வி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள தால், மும்பை தாக்குதல் வழக்கை அக்டோபர் 22ம் தேதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

