பாக்., 'மாஜி' உளவுத்துறை தலைவருக்கு 14 ஆண்டு சிறை
பாக்., 'மாஜி' உளவுத்துறை தலைவருக்கு 14 ஆண்டு சிறை
ADDED : டிச 12, 2025 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இஸ்லாமாபாத்: நம் அண்டை நாடான பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., இயக்குநராக, 2019 முதல் 2021 வரை பணியாற்றியவர் பைஸ் ஹமீத்.
முன்னாள் பிரதமர் இ ம்ரான் கானின் தீவிர ஆதரவாளராக இருந்த பைஸ், விதியை மீறி அரசியல் தலையீடுகளில் ஈடுபட்டதாகவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு எதிரான ரகசிய தகவல்களை வெளியிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த ஆண்டு பைஸ் ஹமீத் கைது செய்யப்பட்ட நிலையில், பாக்., ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இதில், பைஸ் ஹமீத் அதிகார வரம்புகளை மீறி ராணுவ சட்டத்திற்கு அப்பாற்பட்டு நடந்துகொண்டதாகக் கூறி, 14 ஆண்டுகள் அவருக்கு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது.

