வெடித்து சிதறியது பயணியர் விமானம்: தென்கொரியாவில் 179 பேர் உயிரிழப்பு
வெடித்து சிதறியது பயணியர் விமானம்: தென்கொரியாவில் 179 பேர் உயிரிழப்பு
ADDED : டிச 29, 2024 11:44 PM

சியோல்: தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து, 175 பயணியர் உட்பட 181 பேருடன் தென்கொரியாவுக்கு புறப்பட்ட பயணியர் விமானம், அந்நாட்டின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, ஓடுபாதையில் இருந்து விலகி, கான்கிரீட் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்கு உள்ளானதில், 179 பேர் உயிரிழந்தனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து, கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவின் முவான் நகருக்கு, அந்நாட்டைச் சேர்ந்த, 'ஜேஜு ஏர்' விமான நிறுவனத்தின் பயணியர் விமானம் நேற்று புறப்பட்டது.
'போயிங்' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அந்த 737 - 800 ரக பயணியர் விமானத்தில், 175 பயணியர், ஆறு விமான ஊழியர்கள் என, மொத்தம் 181 பேர் இருந்தனர்.
முவான் விமான நிலையத்தில், நேற்று காலை 9:03 மணிக்கு தரையிறங்கிய போது, ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்ற விமானம், எதிரே இருந்த கான்கிரீட் தடுப்புச் சுவர் மீது மோதி வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில், விமானத்தின் வால் பகுதியை தவிர மற்ற அனைத்து பாகங்களும் உருக்குலைந்தன. விமானம் வெடித்துச் சிதறியதை அடுத்து, விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியேறியது. ஓடுபாதையில் இருந்து விலகி, விமானம்
தொடர்ச்சி 7ம் பக்கம்