UPDATED : மார் 23, 2025 05:16 PM
ADDED : மார் 23, 2025 11:01 AM

ரோம்: கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று (மார்ச் 23) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருக்கிறது என டாக்டர்கள் தெரிவித்தனர்.
வாடிகனின் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ், 88, வயது முதுமை காரணமாக உடல் நலம் குன்றியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உடல்ரீதியாக பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறார்.
கடந்த பிப்.,14ம் தேதியன்று ரோமில் உள்ள அகஸ்டினோ ஜெமெலி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறி உள்ளார். சமீபத்தில் தேவாலயத்தில் நடந்த திருப்பலி நிகழ்ச்சியில் போப் பங்கேற்ற புகைப்படத்தை வாடிகன் வெளியிட்டு இருந்தது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று (மார்ச் 23) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இது குறித்து ஜெமிலி மருத்துவனமை இயக்குநர் செர்ஜியோ அல்பெய்ரி கூறியதாவது:
போப் உடல்நிலை சீராக உள்ளது. அவர் இன்று மருத்துவமனையில் இருந்து திரும்பினார். எனினும் அவர் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு கட்டாயம் ஓய்வெடுக்க னேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.