மீண்டும் புடினுடன் பேசுவேன் என்கிறார் அதிபர் டிரம்ப்
மீண்டும் புடினுடன் பேசுவேன் என்கிறார் அதிபர் டிரம்ப்
ADDED : செப் 05, 2025 07:36 AM

வாஷிங்டன்: விரைவில் ரஷ்ய அதிபர் புடினுடன் பேசிவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
உக்ரைன்- ரஷ்யா இடையே நீண்ட நாட்களாக போர் நடந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
சமீபத்தில், சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினர்.
ஐரோப்பிய தலைவர்களுடன் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த சூழலில், வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் முக்கிய தொழில்நுட்ப நிர்வாகிகளுடன் அதிபர் டிரம்ப் ஆலோசித்த பிறகு நிருபர்களை சந்தித்தார்.
அப்போது, ரஷ்ய அதிபர் புடின் உடன் விரைவில் பேசுவீர்களா என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு, ''ஆம் நான் பேசுவேன்'' என அதிபர் டிரம்ப் பதில் அளித்துவிட்டு புறப்பட்டு சென்றார். இதனால் உக்ரைன்-ரஷ்யா இடையே நடந்து போருக்கும் முற்றுப்புள்ளி வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.