ADDED : ஜூலை 25, 2011 09:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நைரோபி: சோமாலியாவின் தெற்கே உள்ள கெடோ மாகாணத்தின் கடும் பஞ்சம் பாதித்த பகுதிகளில், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் சார்பில், 400 டன் உணவுப் பொருட்கள் வினியோகிக்கப்பட்டன.
இதனால், 24 ஆயிரம் பேர் பயன்பெறுவர். ஷெபாப் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதிகளை, கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என, ஐ.நா., அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.