10 லட்சம் இந்தியர்களை வேலைக்கு எடுக்க ரஷ்யா திட்டம்
10 லட்சம் இந்தியர்களை வேலைக்கு எடுக்க ரஷ்யா திட்டம்
ADDED : ஜூலை 15, 2025 06:57 AM
மாஸ்கோ : தொழில் துறைகளில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில், இந்தாண்டு இறுதிக்குள், 10 லட்சம் இந்தியர்களை வேலைக்கு எடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தொடர்கிறது. இதையடுத்து, போர் தளவாடங்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. ரஷ்யாவின் ஸ்வெர்ட்லோவ்ஸ்க் பிராந்தியத்தில் அதிக அளவில் ராணுவத் தயாரிப்பு ஆலைகள் உட்பட பிற ஆலைகளும் உள்ளன.
இளைஞர்கள் ராணுவத்துக்கு அனுப்பப்படுவதால், இந்தத் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்தியாவில் இருந்து, 10 லட்சம் பேரை இந்தாண்டு இறுதிக்குள் வரவழைத்து, வேலை வழங்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஸ்வெர்ட்லோவ்ஸ்க் பிராந்தியத்தில் தனியாக துாதரகம் திறக்கப்பட உள்ளது.