சவுதி அரேபியா: ரூ.12 லட்சம் சம்பாதித்தால் மதுபானம் அருந்த அனுமதி
சவுதி அரேபியா: ரூ.12 லட்சம் சம்பாதித்தால் மதுபானம் அருந்த அனுமதி
ADDED : டிச 11, 2025 05:48 AM

ரியாத்: முஸ்லிம் அல்லாதோர் மதுபானம் அருந்துவதற்கு சவுதி அரேபியா அரசு அனுமதி அளித்துள்ளது. மாதம், 12 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்போருக்கு மட்டும் இந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். இங்கு மதக் கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. அதன்படி, மது அருந்துவதற்கு அந்த நாட்டில் முழு தடை உள்ளது.
இந்த நிலையில், 70 ஆண்டுகளுக்குப் பின், வெளிநாட்டவர் வசதிக்காக தலைநகர் ரியாத்தில் ஒரு மதுபானக் கடை கடந்தாண்டு திறக்கப்பட்டது. ஆனால், மதுபானங்களை வாங்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
தற்போது, மதுபானம் குடிப்பதற்கான கட்டுப்பாடுகளை சவுதி அரேபியா தளர்த்தியுள்ளது. அதன்படி, முஸ்லிம் அல்லாதோர், மதுபானம் வாங்கி குடிக்கலாம். ஆனால், மாதம் 12 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

