ADDED : அக் 10, 2025 11:59 PM
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பின் பேரணியை தடுக்க, நாட்டின் முக்கி ய நகரங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டு, சாலைகள் மூடப்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான போர் இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்தது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 20 அம்ச அமைதி ஒப்பந்தத்தை முன்மொழிந்தார். அதில் சில அம்சங்களை ஏற்பதாக இரு தரப்பும் ஒப்புக் கொண்டன.
இந்நிலையில், அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில், காசாவை கைப்பற்றும் வகையில் இந்த ஒப்பந்தம் உள்ளதாக, நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த, தெஹ்ரீக்-இ-லபாய்க் என்ற பயங்கரவாத அமைப்பு அறிவித்தது.
' காசாவின் துரோகத்திற்கு எதிரான உறு தியான போராட்டம்' என்ற பெயரில், இஸ்லாமாபாதில் உள்ள பார்லிமென்டை நோக்கி பேரணிக்கு அந்த அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.
மேலும், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர் மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதாக அறிவி த்திருந்தனர்.
இதை முறியடிக்கும் வகையில் பிரதான சாலைகளில் கன்டெய்னர்கள் நிறுத்தி, தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. மேலும், ராவல்பிண்டி, இஸ்லாமாபாத் போன்ற நகரங்களில் இணையம் மற்றும் மொபைல் சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்தத் தடைகளை மீறி போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக் கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருவர் பலியாகினர். பலர் காயமைடந்தனர்.