ADDED : டிச 18, 2024 05:00 PM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்டு டிரம்ப்பின் புதிய ஹேர்ஸ்டைலுடன் உள்ள வீடியோ, தற்போது சமூகவலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
2024 ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் 295 தேர்தல் ஓட்டுக்களை பெற்ற டிரம்ப் வெற்றி பெற்றார்.வெள்ளை மாளிகையை மீட்டெடுக்கத் தேவையான 270 ஓட்டுக்கள் வரம்பை எளிதாகக் கடந்தார்.
226 தேர்தல் ஓட்டுக்களை பெற்ற ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸை டிரம்ப் தோற்கடித்தார்.
2025 ஜனவரி 20 அன்று நடைபெறும் அதிபர் பதவியேற்பு விழாவில் டிரம்ப் பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் வித்தியாசமான சிகை அலங்காரத்தில் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ப்ளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள டிரம்ப் இன்டர்நேஷனல் கோல்ட் கிளப்பில் விளையாட அவர் வருகிறார். அப்போது, அங்கு திரண்டிருந்த ரசிகர்களை அன்புடன் வரவேற்கிறார்கள்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.